ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கோவையில் தொடங்கும் நடைபயணத்தில் திரளாக கலந்து கொள்ள முடிவு-காங்கிரஸ் மண்டல ஆலோசனை கூட்டத்தில் முடிவு

ஈரோடு : ஒன்றிய அரசை கண்டித்து  தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பில் கோவையில் இருந்து சென்னை  வரை நடைபயணம் செல்ல உள்ளதையடுத்து இதற்கான ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று  நடைபெற்றது.கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை தலைவர்  மகாத்மா சீனிவாசன் தலைமை தாங்கினார். ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் மனித  உரிமை துறை தலைவர் வினோத் மாரியப்பா வரவேற்றார்.  தமிழ்நாடு மாநில  துணைத் தலைவர் அன்பு, வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ராஜேந்திரன்,  சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில்  ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரவி பேசினார். கோவையில் துவங்கி சென்னை வரை 18 நாட்கள் ஜிஎஸ்டி உயர்வு,  பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கினை  கண்டித்து நடைபெற உள்ள நடைபயணத்தில் திரளாக கலந்து கொள்வதென முடிவு  செய்யப்பட்டது. கூட்டத்தில் மண்டல தலைவர்கள் திருச்செல்வம், அம்புலி, விஜயபாஸ்கர், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பாஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: