மேலும் 2 பி-8ஐ போர் விமானம் இந்திய கடற்படையில் இணைப்பு

புதுடெல்லி: நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழிக்க கூடிய 2 பி-8ஐ போர் விமானங்கள் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டன. அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து எட்டு பி-8ஐ போர் விமானங்களை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு கடந்த 2009ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது.

இந்தப் போர் விமானங்கள் நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவையாகும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு, ஊடுருவல் நடவடிக்கைகளை உளவு பார்ப்பதில் பி-8ஐ விமானங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.

அதன்படி, முதல் எட்டு பி-8ஐ போர் விமானம் கடந்த 2013ம் ஆண்டில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டன. இவை தற்போது அரக்கோணத்தில் ஐஎன்எஸ் ராஜாளியில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது மேலும் 2 பி-8ஐ போர் விமானங்கள் கடந்த 30ம் தேதி கோவா வந்தடைந்தன.  இது குறித்து கடற்படை செய்தி தொடர்பாளர் விவேக் மத்வால் கூறுகையில், `உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கருவிகள் பொருத்தப்பட்டு, அனுமதி பெற்ற பிறகு இவை இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த போர் விமானங்களுக்கு மிக் 29கே படையினர் வரவேற்பு அளித்தனர். இரண்டாவது முறை கூடுதலாக வாங்கிய 4 பி-8ஐ போர் விமானங்கள் 316 விமானப்படை பிரிவில் ஐஎன்எஸ் ஹன்சாவில் இருந்து செயல்பட உள்ளன,’ என்றார்.

Related Stories: