புல்லிபாய் செயலி விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?.. அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி காவல் ஆணையருக்கு உத்தரவு

டெல்லி: புல்லிபாய் செயலி விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து டெல்லி காவல் ஆணையரிடம் சிறுபான்மையினர் நலவாரியம் அறிக்கை கேட்டுள்ளது. முஸ்லீம் பெண்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதி இல்லாமல் சமூக வலைத்தளங்களில் இருந்து எடுத்து புல்லிபாய் உள்ளிட்ட செயலிகள் பதிவேற்றம் செய்தன. முஸ்லீம் பெண்களை ஏலம் விடுவதாகவும் அந்த செயலிகள் அறிவிப்பு வெளியிட்டு சர்ச்சைகள் ஏற்படுத்தின. முஸ்லீம் பெண்களை அவதூறு செய்யும் விதமாக செயல்பட்ட இந்த செயலிகள் தொடர்பாக மும்பை மற்றும் டெல்லி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பொறியியல் மாணவர் ஒருவரை பெங்களுருவில் மும்பை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் புல்லிபாய் செயலி விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து டெல்லி சிறுபான்மையினர் நலவாரியம் காவல் ஆணையர் ராகேஷ் அதானாவிடம் அறிக்கை கேட்டுள்ளது. முஸ்லீம் பெண்களின் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என கூறியுள்ள சிறுபான்மையினர் நலவாரியம் பிரச்சனையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு வருகிற 10ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் டெல்லி காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: