லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை!: 5,000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிறப்பு புலனாய்வு குழு..ஒன்றிய அமைச்சர் மகன் முக்கிய குற்றவாளியாக சேர்ப்பு..!!

டெல்லி: லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு 5,000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. மேலும் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை முக்கிய குற்றவாளி என சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது ஒன்றிய அமைச்சரின் மகன் கார் ஏற்றி கொலை செய்தது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்தை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் விவசாயிகள் படுகொலை தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. சுமார் 3 மாத கால விரிவான விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழு, 5,000 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ஒன்றிய அமைச்சர் மகன் ஆஷிஷ் நிகழ்விடத்தில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், வழக்கின் முக்கிய குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளார். வழக்கில் ஆஷிஷ் மிஸ்ரா தவிர்த்து மேலும் 13 பேரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related Stories: