மேல்மலையனூர் தாலுகாவில் பன்னீர் ரோஜா பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

மேல்மலையனூர் :  விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா கப்ளாம்பாடி கிராமத்தில் விவசாயிகளால் பன்னீர் ரோஜா பயரிடப்பட்டுள்ளது. அவலூர்பேட்டை சேத்பட் செல்லும் சாலையில் சுமார் 50 சென்ட் பரப்பளவில் பன்னீர் ரோஜா பயிரிடப்பட்டு ரோஜாக்கள் பூத்து குலுங்கி வருவதால் விவசாயிகள் பூக்களை பறித்து திருவண்ணாமலை மற்றும் திண்டிவனம் பூ மார்க்கெட்டில் கிலோ ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை செய்து வருகின்றனர். மேல்மலையனூர் பகுதிகளில் அதிகளவு நெல், மணிலா பணப்பயிர் சாகுபடி செய்வது வழக்கம். இந்நிலையில் தற்போது விவசாயிகளால் பன்னீர் ரோஜா பயிரிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பனிப் பிரதேசங்களில் மட்டுமே பயிரிடப்பட்டு வரும் பன்னீர் ரோஜா, தற்போது மேல்மலையனூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ளதை சாலையோரமாக செல்பவர்கள் ரோஜாக்களின் அழகை ரசித்து செல்கின்றனர்.

Related Stories: