பூம்புகாரில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

சீர்காழி: பூம்புகாரில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நாகை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் 1000க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 40 விசைப்படகுகள், 150 பைபர் படகுகள் மூலம் சுமார் 800 மீனவர்கள் தினந்தோறும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு பிடிக்கப்படும் மீன்கள் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்கின்றன.

இந்தநிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் நேற்று பூம்புகார் கடற்பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் அந்த பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக விசைப்படகுகள் பைபர் படகுகள் கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் சுமார் ரூ.40 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: