உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டில் அமையவுள்ள மேஜர் தயான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

ரேபரேலி: உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டில் அமையவுள்ள மேஜர் தயான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். 5 மாநில தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மிகப்பெரிய மாநிலமான உத்திரபிரதேசத்திற்கு தேசிய கட்சிகள் படையெடுத்து வருகின்றன. உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முக்கியமான உத்திரப்பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், இழந்த தளத்தை மீட்டெடுக்க காங்கிரசும் தீவிரம் காட்டி வருகின்றன.

இதையடுத்து அங்கு புதிய நலத்திட்டங்களை மத்திய அரசும், மாநில அரசும் செயல்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மீரட் நகருக்கு வருகை தருகிறார். அங்கு ரூ.700 கோடி செலவில் அமைய உள்ள மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். இது 540 விளையாட்டு வீராங்கனைகள் மற்றும்  540 விளையாட்டு வீரர்கள் உட்பட 1080 விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திறன் கொண்டதாக இந்த விளையாட்டு பல்கலைக்கழகம் திகழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: