தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது: அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

சென்னை: சென்னையில் 8வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நடந்தது. இதில், தமிழகம் முழுவதிலும் இருக்கக்கூடிய தொழிலதிபர்கள், பொருளாதார நிபுணர்கள் கலந்து கொண்டு உலகத் தமிழர்களுக்கு பொருளாதார உதவிகளை எப்படி செய்வது, உலக தமிழர்களுக்கு நலனுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் பேசினார். பின்னர், அமைச்சர் செஞ்சி மஸ்தான் அளித்த பேட்டியில், ‘‘தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மடியில் கனம் இல்லை என்றால் வழியில் பயம் இருக்க தேவையில்லை. அவர் தவறு செய்திருப்பதால் தலைமறைவாக இருக்கிறார். வெளிநாட்டு தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது’’ என்றார்.  விழாவில் டி.ேக.எஸ்.இளங்கோவன் எம்பி, உலகத்தமிழர் பொருளாதார மாநாட்டு தலைவர் சம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: