திருவொற்றியூரில் பாதிக்கப்பட்டோருக்கு மாற்று வீடுகள் ஒதுக்கீடு: ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேட்டி

சென்னை: சென்னையில் மட்டுமே 23, 000 வீடுகள் சேதமடைந்து வாழத் தகுதியற்றவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றை இடித்து விட்டு புதிய வீடுகளை கட்டித் தருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார். திருவொற்றியூர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு இடிந்ததை அடுத்து குடியிருப்புகளை ஆய்வு செய்வதற்காக அண்ணாபல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநர்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமையில் மந்தைவெளியில் உள்ள ராஜாமுத்தையாபுரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சென்னையில் மட்டுமே 23,000 வீடுகள் வாழத் தகுதியற்றவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த கட்டிடங்களை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்ட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதற்காக முதல் கட்டமாக ரூ. 2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார். சிதிலமடைந்த குடியிருப்புகளை ஆய்வு செய்யும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும், திருவொற்றியூரில் இடிந்த வீடுகளில் வசித்தவர்களுக்கு மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.  

Related Stories: