2022 செப்டம்பரில் திட்டமிட்டப்படி காங். தலைவர் பதவிக்கான தேர்தல்: குஜராத் தேர்தலால் ஒத்திவைக்கப்படுமா?.. என கேள்வி எழுந்ததால் விளக்கம்..!

டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் திட்டமிட்டப்படி செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் அக்கட்சியில் தேர்தல் குழு தலைவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே 2022ம் ஆண்டு இறுதியில் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் நடைபெற இருப்பதால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் திட்டமிட்டப்படி 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என அந்த கட்சியில் தேர்தல் குழு தலைவர் மதுசூதனன் மிஸ்திரி கூறியுள்ளார். கடந்த அக்டோபர் 16-ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தின் போது நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 20-ம் தேதிக்குள் நிரந்தர தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: