சீர்காழி அருகே மணி கிராமத்தில் கொள்ளிடம் ராட்சத குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்-விரைவில் சீரமைக்க வலியுறுத்தல்

சீர்காழி : சீர்காழி அருகே மணி கிராமத்தில் கொள்ளிடம் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் வழிந்தோடுகிறது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மணி கிராமம் ஆணையாங்குளம் மெயின் ரோட்டில் கொள்ளிடம் குடிநீர் பைப்பில் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக தண்ணீர் வெளியேறி சாலையில் வழிந்தோடி வருகிறது. இதனால் பல்வேறு கிராமங்களுக்கு சரிவர தண்ணீர் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் வழிந்து ஓடுவதால் சாலைகள் பழுதாகி வருகிறது. உடைந்த பைப் லைன் மூலம் வெளியேறிய தண்ணீர் மீண்டும் உடைப்பு ஏற்பட்ட பைப் வழியாக கழிவு நீருடன் கலந்து உள்ளே சென்று விடுகிறது. இந்த தண்ணீரைதான் பொதுமக்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி குடிநீர் பைபிள் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: