கூடுதல் தடுப்பூசி செலுத்த மருத்துவ சான்றிதழ் தேவை இல்லை: மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் விளக்கம்

டெல்லி: பூஸ்டர் எனப்படும் கூடுதல் தடுப்பூசி செலுத்த மருத்துவ சான்றிதழ் தேவை இல்லை என மத்தியஅரசு தெரிவித்திருக்கிறது. மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் இதனை தெரிவித்தார். இந்தியாவில் ஜனவரி 10 ஆம் தேதி முதல் முன்கள பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் இணை நோயாளிகளுக்கு கூடுதல் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது.

இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், இணை நோய்கள் இருப்பவர்கள் அதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற தவறான தகவல்கள் பரவியிருப்பதாகவும், மத்திய அரசு அப்படி அறிவிக்கவில்லை என்றும் தெரிவித்தார். இணை நோயாளிகள் தங்கள் மருத்துவரிடம் சுயமாக ஆலோசனையை பெற்றுக் கொள்ள மட்டுமே அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கமளித்தார். 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் தடுப்பூசிக்காக மருத்துவரிடமிருந்து சான்றிதழ் எதுவும் தேவை இல்லை என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  

Related Stories: