பொது சுகாதாரத்துறை செயல்பாட்டில் நாட்டிலேயே தமிழகம் 2வது இடம்: நிதி ஆயோக் அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் 65 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஒன்றிய திட்டக்குழு கலைக்கப்பட்டு, அதற்கு மாற்றாக நிதி ஆயோக் எனப்படும் இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனம் அமைக்கப்பட்டு அதன் மூலமாக நாட்டில் பொது சுகாதாரம் வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் குடிநீர், பாலின சமநிலை உள்ளிட்ட 16 தலைப்புகளில் 115 பணிகளில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களின் பட்டியலை நிதி ஆயோக் அமைப்பு ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 2019-20க்கான பொது சுகாதாரத்துறையின் நிலை குறித்து நிதி ஆயோக் கணக்கிட்டு தரவரிசை ஒன்றை வெளியிட்டு வருகிறது. அதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 23 காரணிகளை கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தர வரிசையை நிதி ஆயோக், ஒன்றிய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்படுகிறது.

அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் பொது சுகாதாரத்துறைகளில், ஒருங்கிணைந்த வளர்ச்சி ஆகியவற்றில் கேரளா முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும், தெலங்கானா மூன்றாவதும், ஆந்திரா 4வதும் அதேபோன்று நாட்டிலேயே அனைத்திலும் மோசமான நிலையில் உத்திரப்பிரதேசம் கடைசியாக உள்ளது என நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தின் சுகாதரத்துறைக்கு 72.42 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் மாநிலங்களின் பொது சுகாதாரம் உட்பட கொரோனா நடவடிக்கை, மருத்துவர்களை மக்கள் அணுகுவது, ஆக்சிஜன், மருந்துகளின் நிலவரங்கள், தடுப்பூசி செலுத்துதல், நிர்வாக திறன்கள் ஆகிய குறித்தும் கணக்கீடு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: