கனவு மெய்படத் தொடங்கியுள்ளன: தாமிரபரணி ஆற்றின் மண்டபங்கள் முதன்முதலாக அரங்கங்களாகின

நெல்லை: இன்று மாலை குறுக்குத்துறை குழந்தைகள் கதையாடல் நிகழ்ச்சி,திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள படித்துறை மண்டபத்தில் நடைபெற்றது. கதை சொல்லி கலைஞர் தாமிரபரணி மதியழகன் அவர்கள் கோமாளியாகவும், காகமாகவும் வந்து இயற்கையின் அவசியத்தை கதைகளாக்கி குழந்தைகளை மகிழ்வித்தார். சிறிது நேரத்தில் குழந்தைகளும் கதைகளை சொல்லி மகிழ்ந்தனர்.

அங்கு வந்திருந்த பெரும்பாலான குழந்தைகள் ஆற்றுக்கு வருவது இதுவே முதல்முறை. அடுத்த நிகழ்வு குழந்தைகள் ஆற்றில் குளிக்கும் நிகழ்வாக இருக்கட்டும். ஆற்றில் குளிப்பதே ஆற்றுக்கும் நமக்குமான உறவை   மேம்படுத்தும். ஒருங்கிணைப்பு ஊஞ்சல், குருத்து குழந்தைகள் அமைப்பு, நல்லதை பகிர்வது நம் கடமை கலை பண்பாட்டு மன்றம், பிரமிள் நூலகம், த.மு.எ.ச நாற்றங்கால்.

Related Stories: