இந்து மதத்தை விட்டு வெளியேறி வேறு மதத்தை தழுவியவர்களை மீண்டும் மதம் மாற்ற வேண்டும்: பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யாவின் பேச்சால் சர்ச்சை..!!

கர்நாடகா: இந்து மதத்தை விட்டு வெளியேறி வேறு மதத்தை தழுவியவர்களை மீண்டும் மதம் மாற்ற வேண்டும் என்று பாஜக இளைஞரணியின் தேசிய தலைவரும், எம்.பி.யுயான தேஜஸ்வி சூர்யா அழைப்பு விடுத்துள்ளது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பெங்களூரு தெற்கு தொகுதியை சேர்ந்த பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவின் பல பேச்சுக்கள் சர்ச்சையாகியுள்ளன. இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தின் விஸ்வர் பணம் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தேஜஸ்வி சூர்யா, இந்து மதத்தை விட்டு வெளியேறிய அனைவரையும் மீண்டும் மதம் மாற்றுவது மட்டமே இந்துக்களுக்கு எஞ்சியிருக்கும் ஒரே வழி என்றும் அதில் பாகிஸ்தானின் முஸ்லீம்களும் அடங்குவார்கள் என்றும் கூறினார்.

வரலாற்றின் போக்கில் சமூக, அரசியல், பொருளாதார காரணங்களுக்காக இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானவர்கள், மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் இந்த தாய் மதம் திரும்பும் திட்டத்தை கர்நாடகா மாநிலத்திலிருந்து தொடங்குவது தான் சரியாக இருக்கும். ஏனெனில் தென்னிந்தியாவில் முகலாயர்கள் உள்ளிட்டோரை ஊடுருவ விடாமல் தடுத்து நிறுத்திய வரலாறு கர்நாடகாவுக்கு உண்டு.

மக்களை இந்து மதத்திற்கு திரும்ப கொண்டுவர ஒவ்வொரு கோயிலும், ஒவ்வொரு மடமும் ஆண்டுதோறும் இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தேஜஸ்வி சூர்யாவின் இத்தகைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு இந்து மதத்திற்கு அவர்களை வரவழைத்தால் அவர்களை எந்தச் சாதியில் சேர்ப்பீர்கள் என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே, உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் மடத்தில் தான் பேசியது தேவையற்ற விவாதத்தை கிளப்பி விட்டுள்ளதாகவும், எனவே தான் பேசியதை வாபஸ் பெறுவதாகவும் பாஜகவை சேர்ந்த எம்.பி. தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார்.

Related Stories: