டெல்லியில் காற்று மாசு ஸ்விக்கி, ஓலா வாகனங்களுக்கு பெட்ரோல் போட தடை

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகமாகி கொண்டே வருகிறது. இதனால், மக்கள் சுவாசிப்பதற்கு கூட சிரமப்படுகின்றனர். இந்த காற்று மாசு பிரச்னைக்கு தீர்வு காண, டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டெல்லியில் நிலவும் காற்று மாசுவில் 30 சதவீதம் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் ஏற்படுகிறது. எனவே,  இதனை கட்டுப்படுத்த டெல்லி அரசு 2 முக்கிய நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள், ‘சோமோட்டோ, ஸ்விக்கி, ஓலா, உபேர் உள்ளிட்ட நிறுவனங்கள் முழுவதும் மின்சார வாகன பயன்பாட்டுக்கு மாறும்படி கேட்டுக் கொள்ளப்பட உள்ளது. இவை டெல்லியில் பதிவு  செய்யப்பட்ட வாகனங்களில் 30 சதவீதம் உள்ளன. மேலும், இந்த பயன்பாட்டுக்காக இயக்கப்படும் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளை நிரப்பக் கூடாது என பெட்ரோல் பங்க்குகளுக்கு உத்தரவிடப்பட உள்ளது,’ என தெரிவித்துள்ளனர்.

Related Stories: