உலகிலேயே மிக விலையுயர்ந்த ரூ.37 கோடி ஆடை அணிந்த நடிகை ஊர்வசி ரவுடேலா

மும்பை: பிரபல நட்சத்திரங்கள் பேஷன் ஷோக்கள், தனியார் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது விலையுயர்ந்த ஆடை அணிவது வழக்கம். பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியை காதல் திருமணம் செய்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அனுஷ்கா சர்மா அணிந்திருந்த ஆடையின் மதிப்பு ரூ.30 லட்சம். 2019ல் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஈஷா தியோல் அணிந்திருந்த இளவரசி கவுனை தயார் செய்ய 350 மணி நேரம் ஆனது. அந்த கவுன் விலை ரூ.26 லட்சம். நடிகை ஷில்பா ஷெட்டி தனது திருமண நிகழ்ச்சியில் அணிந்திருந்த சிவப்பு நிற சேலையின் விலை ரூ.50 லட்சம். துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஊர்வசி ரவுடேலா, உலகிலேயே மிக விலையுயர்ந்த தங்கத்திலான ஆடையை அணிந்திருந்தார். இதன் மதிப்பு ரூ.37 கோடி. 2019ல் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தீபிகா படுகோன் அணிந்திருந்த இளவரசி கவுன் விலை ரூ.50.50 லட்சம். இந்த ஆடையை உருவாக்க 160 மணி நேரம் ஆனது. நடிகை ஐஸ்வர்யா ராய் தனது திருமணத்தில் காஞ்சிபுரம் புடவை அணிந்திருந்தார். அன்றைய நாளில் அந்த புடவையின் விலை ரூ.75 லட்சம்.

Related Stories: