தடுப்பூசி சான்று இருந்தால்தான் சட்டப்பேரவைக்குள் அனுமதி!: கொரோனாவை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு நடவடிக்கை..!!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் வைத்திருந்தாள் மட்டுமே அனுமதிக்கபடுகிறார்கள். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் தடுப்பூசி செலுத்திய சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடாதவர்கள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு முகாம்கள் நடந்து வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான ஆவணம் எல்லா இடங்களிலும் கட்டாயம் கேட்கப்படும் என சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில் பல்வேறு சேவைகளுக்காகவும், தொகுதி விவகாரங்களுக்காகவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சட்டபேரவை வளாகத்திற்கு வந்து செல்கின்றனர். இது தவிர சட்டப்பேரவையில் உள்ள பல்வேறு அலுவலகங்களில் நூற்றுக்கணக்கான ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். எனவே இன்று காலை முதல் சட்டப்பேரவை அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை சுகாதாரத்துறை ஊழியர்கள் கேட்டனர். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அங்கேயே தடுப்பூசி செலுத்தப்பட்டது. சான்றிதழ் இல்லாதவர்களை சட்டப்பேரவை அலுவலகத்திற்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

Related Stories: