முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் உடலுக்கு 2ம் நாளாக முதல்வர் ஸ்டாலின், முக்கிய பிரமுகர்கள் நேரில் அஞ்சலி..!!

சென்னை: உடல்நலக்குறைவால் காலமான கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் உடலுக்கு பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இரண்டாவது நாளாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சண்முகநாதனின் இல்லத்தில் அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நேற்று மாலை அங்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுமார் 1 மணி நேரம் சண்முகநாதன் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இன்று மீண்டும்  மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் சண்முகானந்தனின் வீட்டிற்கு சென்று அவருடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் சண்முகநாதனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர். சண்முகானந்தனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், விவசாயிகளின் பிரச்னை குறித்து கலைஞரிடம் எடுத்துரைத்தவர் சண்முகநாதன் என புகழாரம் சூட்டினார். பொதுமக்களின் அஞ்சலியை தொடர்ந்து சண்முகானந்தனின் இறுதி சடங்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு மயிலாப்பூர் இடுகாட்டில் நடைபெறும் என்று அவருடைய குடும்பத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.

Related Stories: