செவ்வாய் கிரகத்தில் பழமையான பாறைகளை கண்டறிந்த நாசா!: புகைப்படங்களை வெளியிட்டு அசத்தும் பெர்செவரன்ஸ் ரோவர்..!!

ஸ்ரீஹரிகோட்டா: நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் உள்ள பழமையான பாறைகளை கண்டறிந்திருக்கிறது. அதன் ஆராய்ச்சியில் முக்கிய மைல் கல்லாக கருதப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசிரோ என்ற பள்ளத்தை ஆராய்ச்சி செய்ய கடந்த ஆண்டு ஜூலை 30ம் தேதி பெர்செவரன்ஸ் என்ற ரோவரை நாசா விண்ணில் ஏவியது. இது கடந்த பிப்ரவரி 18ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து பல்வேறு புகை படங்களை பூமிக்கு அனுப்பி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது செவ்வாய் கிரகத்தில் உள்ள பழமையான பாறைகள் கண்டறியப்பட்டிருக்கின்றன.

இந்த பாறைகள் எரிமலை வெடிப்பால் தோன்றி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த பாறையின் தன்மை செவ்வாயில் தண்ணீர் மற்றும் உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியம் உள்ளது என்று நாசா கணித்துள்ளது. நாசாவின் ஆராய்ச்சியில் இந்த பாறை முக்கிய மைல் கல்லாக கருதப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த பாறைகளின் மாதிரிகள் பூமிக்கு கொண்டுவரப்படும் நிலையில் அவை எந்த காலத்தில் தோன்றியவை என்பதை கண்டுபிடித்துவிட முடியும். இதன் மூலமாக செவ்வாய்கிரகம் மற்றும் சூரிய குடும்பத்தை பற்றி பல்வேறு வியப்பூட்டும் தகவல்கள் நமக்கு கிடைக்கலாம்.

Related Stories: