திமிரி அருகே சுகாதாரத்துறை சார்பில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணி தீவிரம்: வீடு, வீடாகச் சென்று சோதனை

ஆற்காடு: ஆற்காடு  அருகே சுகாதாரத்துறை  சார்பில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள வரகூர் ஊராட்சியில் சுகாதாரத்துறை சார்பில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.   ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் நேற்று நடந்த துவக்க நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் (பொறுப்பு)  மணி, சுகாதார மேற்பார்வையாளர் பழனி ஆகியோர், தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார குழுவினர் மேற்கொள்ள வேண்டிய டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிகள் குறித்து விளக்கி கூறினர். இப்பணியில் 30 பேர் கொண்ட குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து வரகூர் ஊராட்சிக்குட்பட்ட வரகூர், கருங்காலிகுப்பம், வரகூர் புதூர்  உட்பட பல்வேறு  பகுதிகளில் வீடு வீடாக சென்று டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுப்புழுக்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதேபோல் வீடு வீடாக சென்று தொட்டிகளில் தேக்கி வைத்துள்ள தண்ணீரில் கொசுப்புழு ஒழிப்பு மருந்தினை தெளித்து, கிருமி நாசினி மற்றும் புகைமருந்து அடிக்கும் பணியிலும் ஈடுபட்டனர். அங்குள்ள மேல்நீர் தேக்கத் தொட்டியிலிருந்து வழங்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு சரிபார்க்க பட்டது. மேலும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.இப்பணிகளை திமிரி வட்டார மருத்துவ அலுவலர் கவுதம்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கொரோனா தொற்று  பரவல் குறித்தும்,  அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினார். 

Related Stories: