சென்னை: ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறை உருவாக்கி புகார்கள் பெறப்பட்டு வரும் நிலையில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் வரும் புகார்களை கண்காணிக்க ஒருங்கிணைப்பு அதிகாரியை பள்ளி கல்வித்துறை நியமித்துள்ளது. தனியார் பள்ளிகள் மீது அதிக அளவில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் வந்து குவிந்தபடி இருக்கிறது. இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறைக்கு வரும் புகார்களை கண்காணிக்க ஒருங்கிணைப்பு அதிகாரி ஒருவரை பள்ளிக் கல்வி ஆணையர் நியமித்துள்ளார். இதுகுறித்து பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவு: தமிழகத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெறப்படும் மனுக்களுக்கு உரிய பதில் அளிக்கப்படுவதை கண்காணிக்கவும் அதில் குறைகள் ஏதாவது இருந்தால் மாவட்ட மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தவும், பள்ளிக் கல்வி இயக்கக அளவில் ஒருங்கிணைப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுகிறார். இதன் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பில் எம்.ராம சுந்தரம் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். இவரது செல்போன் எண் 8220878369, dirsedu@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்….
The post பள்ளிக்கல்வித்துறை புகார்களை கண்காணிக்க அதிகாரி நியமனம் appeared first on Dinakaran.