கொடைக்கானல் கரடி சோலை அருவியை காண அனுமதி வேண்டும்: சுற்றுலா பயணிகள் கோரிக்கை

கொடைக்கானல்: கொடைக்கானல்  நகர் பகுதியை ஒட்டி உள்ளது கரடி சோலை அருவி. ஏரியில் இருந்து சுமார் ஒரு  கிமீ தொலையில் அமைந்துள்ள இந்த அருவியில், மழை காலங்களில் தண்ணீர்  ஆர்ப்பரித்து கொட்டும். இதனை காண அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வந்து  செல்வார்கள். இந்த அருவி பார்ப்பதற்கு மிக அழகாகவும் இருக்கும்.  வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவி கொரோனா பரவலால் கடந்த பல  மாதங்களுக்கு முன்பாக மூடப்பட்டது.

வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற  சுற்றுலா இடங்கள் அனைத்தும் தற்போது திறக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த  கரடி சோலை அருவி மட்டும் தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது. எனவே இந்த  அருவியை காண்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள், பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: