இந்தோனேசியாவில் பயங்கர பூகம்பம்: சுனாமி எச்சரிக்கையால் பீதி

ஜகர்தா: இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் அளவில் நேற்று பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இந்தோனேசியாவில் அடிக்கடி மிகப்பெரிய அளவில் பூகம்பம் ஏற்படுவது சாதாரணமாகி விட்டது. கிழக்கு இந்தோனேசியாவில் உள்ள புளோரஸ் தீவில் நேற்று பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 12 கிமீ ஆழத்தில் இதன் மையம் இருந்தது. 7.4 ரிக்டர் புள்ளியில் இது ஏற்பட்டதால், கடல் அலை போல் நிலம் குலுங்கியது. மேலும், மலுக்கு, கிழக்கு நூசா டெங்காரா, மேற்கு நூசா டெங்காரா, தென் கிழக்கு மற்றும் தெற்கு சுலவேசி பகுதிகளுக்கு  சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்தனர்.

ஆனால், 2 மணி நேரத்துக்குப் பிறகு இந்த எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த பூகம்பத்தால் கிழக்கு புளோரஸ் தீவின் லரன்துகா, மவுமெரி உட்பட பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் பலமாக குலங்கின. பள்ளி கட்டிடங்கள், வீடுகள் சிலவற்றில் விரிசல்கள் ஏற்பட்டன. இருப்பினும்,  பெரியளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. இந்த அசம்பாவிதத்தில் ஒருவர் மட்டுமே காயமடைந்தார்.  பூகம்பத்தின் போது மக்கள் அலறியடித்து கொண்டு ஒடி வந்து, சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

15 முறை நில அதிர்வு

நேற்றைய பூகம்பத்துக்குப் பிறகு தொடர்ச்சியாக 15 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன. அவற்றில் சில அதிகப்பட்சமாக 5.6 ரிக்டர் புள்ளியாக பதிவானது.

Related Stories: