கிணத்துக்கடவு அருகே 100 வாழைகளை நாசப்படுத்திய காட்டுப்பன்றிகள்-விவசாயிகள் வேதனை

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பகுதியில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகரிப்பால் வாழை சாகுபடி வெகுவாக பாதித்துள்ளது. இதனால் விவசாயிகள்கள் வேதனையடைந்துள்ளனர்.காட்டுப்பன்றிகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். கோதவாடி குளத்திலுள்ள புதர்களிலும், குளத்திற்கு வரும் நீர் வழிப்பாதைகளிலும் கடந்த சில வருடங்களாக காட்டுப்பன்றிகள் சுற்றி வருகிறது. தற்போது நீர்வழிப்பாதைகளில் தண்ணீர் வந்து குளத்திற்கு செல்வதால் காட்டுப்பன்றிகள் அருகில் உள்ள கிராமங்களில் முகாமிட்டு வாழைக்கன்றுகளை இரவு நேரங்களில் உணவாக உட்கொண்டு வருகின்றது.

இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். கிணத்துக்கடவு பகுதியில் கணேஷ் என்பவரது தோட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் 100க்கும் மேற்பட்ட வழைக்கன்றுகளை சேதப்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், கிணத்துக்கடவு சுற்றுவட்டார கிராமங்களில் தற்போது பலர் வாழை மேற்கொள்கின்றனர். காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த இரவு பகலாக காவல் காக்கின்றனர்.  காட்டுப்பன்றிகள் கூட்டமாக வந்து வாழைக்கன்றுகளை முற்றிலுமாக சேதப்படுத்துகிறது. இதனால் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படுகிறது’’ என்றார்.

Related Stories: