திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு மிக முக்கிய உற்சவ நாட்களில் அணிவிக்க வைரம், மாணிக்கம் ஆகியன பதித்த 5.3 கிலோ கை கவசத்தை பக்தர் வழங்கினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி ஏராளமான பக்தர்கள் தினமும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். அதோடு ஏழுமலையானுக்கு தங்கத்தில், வைரங்கள் பதித்த நகைகள், கிரீடம், வாள் உள்ளிட்டவற்றை வேண்டுதலுக்கு ஏற்ப பக்தர்கள் காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.
