கண்ணு முன்னாடியே எரிஞ்சு கிட்டே வெளியே வந்தாங்க: விபத்தை நேரில் பார்த்தவர் பேட்டி

நீலகிரி: ஹெலிகாப்டர் மரத்தில் மோதி தீப்பிடித்து எரிந்தது என விபத்து நடந்த பகுதியில் விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். வெலிங்டன் பயிற்சி கல்லூரியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பிபின் ராவத், அவரது மனைவி உளப்பட 14 பேர் பயணம் செய்துள்ளனர். ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். ஏற்கனவே 4 பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. குன்னூரில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்துள்ளார்.

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில் பிபின் ராவத் நிலை குறித்து தெரியவில்லை. அவரது மனைவி மதுலிக்கா ராவத் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெலிகாப்டர் மரத்தில் மோதி தீப்பிடித்து எரிந்தது என விபத்து நடந்த பகுதியில் விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். பிற்பகல் 12 மணிக்கு டமார் என்ற சத்தம் கேட்டது. மரம்தான் ஒடிந்து விழுகிறதென திரும்பிப் பார்த்தேன். நெருப்பு பயங்கரமாக எரிந்தது. ஒரு தகடு வந்து இங்கிருந்த மரத்தின்மீது விழுந்து எரிந்தது. தீயில் பற்றி ஒருவர் எரிந்து விழுந்தார். எங்களை ராணுவ அதிகாரி கைகளை அசைத்து கூப்பிட்டார். அருகிலிருந்த பையன் போலீஸாருக்கு போன் செய்தார். சம்பவம் நடந்த 10 நிமிடத்தில் போலீஸாரும் வந்தனர்.

ஆனால், கரும்புகை மூட்டத்துட்டன் புகுபுகுவென தீ கொளுந்துவிட்டு எரிந்துக்கொண்டிருந்தார். இந்த சம்பவம் நடந்தபோது புகைமூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் பெரியதாக என்ன ஆனது என உடனே நினைக்கமுடியவில்லை. தீ சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக எரிந்துக்கொண்டிருந்தது. சிலர் கண்முன்னே எரிஞ்சுகிட்டு வெளியே வந்ததைப் பார்த்ததும் எனக்கு படபடப்பு ஏற்படுவிட்டது” என தெரிவித்துள்ளார்.

Related Stories: