ஹெலிகாப்டர் விபத்து; தமிழக அரசு அவசர ஆலோசனை: நீலகிரிக்கு விரைகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து நீலகிரிக்கு விரைகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். வெலிங்டன் பயிற்சி கல்லூரியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பிபின் ராவத் , அவரது மனைவி உளப்பட 14 பேர் பயணம் செய்துள்ளனர். ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். ஏற்கனவே 4 பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. குன்னூரில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்துள்ளார்.

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில் பிபின் ராவத் நிலை குறித்து தெரியவில்லை. அவரது மனைவி மதுலிக்கா ராவத் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக நீலகிரி ஆட்சியருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். ஹெலிகாப்டர் விபத்து மீட்பு பணி குறித்து முதல்வர் கேட்டறிந்தார். விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையை உறுதிப்படுத்துமாறு ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார். நீலகிரி ஹெலிகாப்டர் விபத்து குறித்து தமிழநாடு தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குன்னூருக்கு விரைகிறார். சென்னையில் இருந்து மாலை 5 மணி அளவில் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து குன்னூர் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதை அடுத்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு குன்னூர் விரைகிறார்.

Related Stories: