சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த 13 மாதங்களில் 57 நாய்கள் இறந்துள்ளதாக தமிழக கால்நடைத்துறை ஐகோர்ட்டில் தகவல்

சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த 13 மாதங்களில் 57 நாய்கள் இறந்துள்ளதாக தமிழக கால்நடைத்துறை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் நாய்களை முறையாக பராமரிப்பதை கண்காணிக்க கோரி கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. தெரு நாய்களை முறையாக பராமரிக்க வேண்டியது உள்ளாட்சி அமைப்புகளின் கடமை. அடிப்படை உரிமை பேசும் நேரத்தில், அடிப்படை கடமையை கருத்தில் கொள்ள வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Related Stories: