குன்னூரில் தொடர் கன மழையால் புத்துயிர் பெற்ற லாஸ் பால்ஸ் நீர்வீழ்ச்சி-ஏரி, அணைகள் நிரம்பி வழிகிறது

குன்னூர் : நீலகிரி  மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழை இல்லாததால்  நீர்வீழ்ச்சி, அருவி, நீர் நிலைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. தற்போது கடந்த சில தினங்களாக குன்னூர் பகுதியில் பகல் மற்றும் இரவு  நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. மழையால் அனைத்து ஏரிகள், அணைகள்  உள்ளிட்ட நீர் நிலைகள் நிறைந்து காணப்படுகிறது.

அணைகள் நிரம்பி தண்ணீர்  அதிகளவில் மலைப்பாதையில் வழியாக நீர்வீழ்ச்சிகளாக  பயணித்து  மேட்டுப்பாளையம் பவானி அணையை அடைகிறது‌. குன்னூர் மேட்டுப்பாளையம்  நெடுஞ்சாலையில் லாஸ் பால்ஸ் பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடி  வருகிறது. அதே போன்று காட்டேரி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களிலும் தண்ணீர்  அதிகமாக கொட்டுவதால் வன விலங்குகளுக்கு தண்ணீர் தேவை பூர்த்தி அடையும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: