அறநிலையத் துறையில் இணை ஆணையர்கள் பணியிட மாற்றம்

சென்னை:தமிழக அரசின் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் சந்தர மோகன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: பொதுநலன் மற்றும் நிர்வாக நலன் கருதி, இந்து சமய அறநிலையத்துறையில் பணிபுரிந்து வரும் இணை ஆணையர்கள் பணியிட மாறுதல், பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி இணை ஆணையர் எஸ்.செல்வராஜ், திருச்சி இணை ஆணையராகவும்.திருச்சி இணை ஆணையர் அர.சுதர்சன், சென்னை ஆணையர் அலுவலக இணை ஆணையராகவும் (திருப்பணி), சென்னை ஆணையர் அலுவலக (தலைமையிடம்) இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, திருநெல்வேலி இணை ஆணையராகவும், சிவகங்கை இணை ஆணையர் ந.தனபால், சென்னை இணை ஆணையராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.சென்னை தலைமையிடம் இணை ஆணையர் (சரிபார்ப்பு) இரா.வான்மதி, சென்னை ஆணையர் அலுவலகக தலைமையிட இணை ஆணையராகவும், மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர், செயல் அலுவலர் க.செல்லதுரை, சிவகங்கை இணை ஆணையராகவும் முழு கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

More