2021ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: முதலமைச்சர் கணினித் தமிழ் விருது 2021ஆம் ஆண்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக முதலமைச்சர் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூபாய் 1  இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது.

அவ்வகையில் 2021ஆம் ஆண்டுக்குரிய முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு தனியாள் மற்றும் நிறுவனத்திடமிருந்து,  தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் 2018, 2019, 2020ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்.  இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் (www.tamilvalarchithurai.com ) இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விருதுக்கான விண்ணப்பம் தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு வந்து சேர வேண்டிய இறுதி நாள் 31.12.2021.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி    தொடர்புக்கான தொலைபேசி எண்கள்/ மின்னஞ்சல் முகவரி    

தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 600 008    044 - 28190412  /  044 - 28190413 tvt.budget@gmail.com இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: