உலக மண் தினத்தையொட்டி விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்-எம்எல்ஏ.க்கள், கலெக்டர் வழங்கினார்

தேவதானப்பட்டி/உத்தமபாளையம்  : தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி ஊராட்சியில் வேளாண்மைத்துறை, உழவர்நலத்துறை சார்பில் உலக மண் தினம் மற்றும் தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் நடந்தது. பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார் தலைமை வகித்தார். துணை வேளாண்மை அலுவலர் குணசேகரன் வரவேற்றார்.  

மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் அனுசுயா மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், பெரியகுளம் வேளாண்மை உதவி இயக்குனர் சென்றாயன், பெரியகுளம் ஒன்றிய திமுக பொறுப்பாளர் பாண்டியன், பெரியகுளம் யூனியன் சேர்மன் தங்கவேலு, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பாக்கியம் உட்பட கலந்து கொண்டனர். இதில், விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. தேசிய உணவுப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயறு வகைகள், திரவ உயிர் உரங்கள், தார்பாய்கள் மானியத்தில் வழங்கப்பட்டது.

அதேபோல், உத்தமபாளையம் அருகே உ. அம்மாபட்டியில்  உலக மண் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில், உத்தமபாளையம் ஒன்றிய திமுக. செயலாளர் அணைப்பட்டி முருகேசன், சின்னமனூர் யூனியன் சேர்மன் நிவேதா அண்ணாத்துரை, பேரூர் கழக செயலாளர்கள் உத்தமபாளையம் மீரான், அனுமந்தன்பட்டி ராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் உ.அம்மாபட்டி பாபு என்ற அறிவழகன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: