மாடர்னாக இருப்பதால் நடிக்க பயம் கிராமத்து பெண்களிடம் ராஷ்மிகா நடிப்பு பயிற்சி

சென்னை: கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் ஹீரோயினாக நடித்து வருபவர், கன்னட நடிகை ராஷ்மிகா. தற்போது தெலுங்கு உள்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள ‘புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக நடித்துள்ளார். ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தல் சம்பவங்களை மையமாக வைத்து 2 பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் வரும் 17ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் வள்ளி என்ற கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ள ராஷ்மிகா, படப்பிடிப்பு முடியும்வரை கருப்பு நிற மேக்கப் அணிந்துகொண்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் மாடர்ன் டைப் பெண் என்பதால், வள்ளி கேரக்டரில் நடிக்க நிறைய ஹோம்ஒர்க் செய்தேன். கிராமத்து பெண்களின் மேனரிசங்கள், அவர்களது முகபாவங்கள் எப்படி இருக்கும் என்று கற்றுக்கொண்டேன். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு திருப்பதி அருகிலுள்ள கிராமத்துக்கு சென்று, அங்கு வசிக்கும் பெண்களுடன் பேசி பழகி, அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் உடல்மொழியை கவனித்து நடிப்பு பயிற்சி பெற்றேன். இதனால், ‘புஷ்பா’ படப்பிடிப்பில் என்னால் பயமின்றி நடிக்க முடிந்தது’ என்றார்.

Related Stories:

More