மலையாள நடிகர் சங்க தலைவராகிறார் மோகன்லால்

திருவனந்தபுரம்: மலையாள நடிகர்களுக்காக ‘அம்மா’ என்ற பெயரில் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக கடந்த 2018ம் ஆண்டு நடிகர் மோகன்லால் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் வரும் 19ம் தேதி மீண்டும் சங்க தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வேட்புமனு தாக்கல் ெதாடங்கியது. தலைவர் பதவிக்கு நடிகர் மோகன்லால், பொதுச்செயலாளர் பதவிக்கு இடைவேளை பாபு ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

மனுக்களை வாபஸ் பெறும் தேதி முடிந்த நிலையில், நேற்று மனுக்கள் பரிசீலனை நடந்தது. இதில் தலைவர் பதவிக்கும், பொதுச்செயலாளர் பதவிக்கும் வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்ைல. இதையடுத்து தலைவராக மீண்டும் நடிகர் மோகன்லால் தேர்வு செய்யப்படுவது உறுதியாக விட்டது. இதே போல் பொதுச்செயலாளராக இடைவேளை பாபுவும் ேபாட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். மற்ற பதவிகளுக்கும் 19ம் தேர்தல் நடைபெற உள்ளது.

Related Stories:

More