தாம்பரம் அடுத்த கவுரிவாக்கத்தில் வசந்த் and கோ 100வது கிளை திறப்பு: பல்வேறு சலுகைகள் அறிவிப்பு

சென்னை: வசந்த் & கோவின் 100வது கிளை திறப்பு விழா தாம்பரம் அடுத்த கவுரிவாக்கத்தில் நேற்று நடந்தது. விஜிபி நிறுவனர் சந்தோஷம், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும் வசந்த் and கோ நிர்வாக இயக்குனருமான விஜய் வசந்த் ஆகியோர் ரிப்பன் வெட்டி புதிய கிளையை திறந்து வைத்தனர். வசந்த் and கோ நிர்வாக இயக்குனர் தமிழ்செல்வி வசந்தகுமார், இயக்குனர்கள் தங்கமலர் ஜெகநாத், வினோத் குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.

நிகழ்ச்சியில் விஜய் வசந்த் கூறுகையில், ‘‘1978ம் ஆண்டு சிறிய கடையாக தி.நகரில் ஆரம்பிக்கப்பட்ட வசந்த் and கோ இன்று தனது 100வது கிளையை தொடங்கியுள்ளது. அப்பா வசந்தகுமாரின் கனவு 100வது கிளையை துவங்கவேண்டும் என்பதுதான். அவரது கனவு நிறைவேறியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நிதி ஆண்டுக்குள், மேலும் 50 கிளைகளை திறக்கவேண்டும் என்பது எங்களது இலக்கு.

அதன்படி, 2022க்குள் 150 கிளை கொண்டதாக வசந்த் & கோ உயரும். 100வது கிளை திறப்பு விழாவை முன்னிட்டு, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.5 ஆயிரத்துக்கு மேல் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சுலோகன் போட்டி நடத்தப்பட்டு, டிவி, மிக்ஸி, ப்ரிட்ஜ் மற்றும் வாஷிங் மிஷின் உள்ளிட்ட 21 பொருட்கள் ஒவ்வொன்றிலும், நூறு நூறு வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, டிவி, மிக்ஸி, ப்ரிட்ஜ், மின்விசிறி போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்படும்,’’ என்றார்.

Related Stories:

More