அரசியலை விட்டு கமல்ஹாசன் விலகலா?..மநீம அறிக்கை

சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் அரசியலை விட்டு விலகுவதாக வெளியான தகவல்கள் குறித்து நேற்று மநீம துணை தலைவர் ஏ.ஜி.மவுரியா வெளியிட்ட அறிக்கை: கொரோனா காரணமாக மநீம தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, `தீவிர அரசியலில் இருந்து கமல் ஓய்வுபெற முடிவு’, `கமல் கட்சிக்கு கிளைமாக்ஸ்’ என்பது போன்ற தகவல்கள் வெளியானது.

கமல்ஹாசன் தான் உயிரோடு இருக்கும்வரை அரசியலிலும், அரசியல் இருக்கும்வரை மநீம இருக்கும் என்பதை ஏற்கனவே தெளிவாக குறிப்பிட்டுள்ளார். கட்சி தொடங்கியபோது, தன் வாழ்நாள் முழுவதும் அரசியலில் சேவையாற்றிடுவேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் வகுத்த அந்த கொள்கையின்படி இப்போதும் செயல்பட்டு வருகிறார். அவர் எந்த சூழ்நிலையிலும் அரசியலை விட்டு விலக நினைத்தது இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

More