குறு, சிறு நிறுவனங்களுக்கு விரைந்து பட்டா வழங்க தலைமை செயலாளர் தலைமையில் குழு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

சென்னை:  சென்னை, கிண்டியில் உள்ள சிட்கோ அலுவலக நிறுவன கூட்ட அரங்கில், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவன பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நேற்று நடைபெற்றது.  அப்போது அவர் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் ஒரே சீரான தொழில் வளர்ச்சியை கொண்டுவர ஏதுவாக, இந்த அரசு பொறுப்பேற்றவுடன் திருவள்ளுர், செங்கல்பட்டு, திருச்சி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 413 ஏக்கர் நிலப்பரப்பில் 241 கோடி மதிப்பில் மேலும் 5 புதிய தொழிற்பேட்டைகளும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 35.63 கோடி மதிப்பில் 50 விழுக்காடு அரசு மானியத்துடன் 1 புதிய தனியார் தொழிற்பேட்டை உருவாக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்றும் வகையில் அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் நில உரிமை துறைகளுடன் கலந்து பேசி திட்டத்தினை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு நில வகைப்பாட்டினால் பட்டா வழங்க இயலாமல் உள்ள சிட்கோ தொழிற்பேட்டைகளில் உள்ள நில பிரச்சனைகளை விரைந்து தீர்க்கும் வகையில் தலைமை செயலாளர் தலைமையில் உயர்மட்ட செயலாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: