ஒமிக்ரான் குறித்து பல்வேறு கேள்விகளுக்கு விடை இல்லை; இதன் அறிகுறிகள் தீவிரத்தன்மை கொண்டது: WHO

ஜெனிவா: தென்ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் குறித்து பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்காததை தொடர்ந்து ஆய்வுகள் தேவை என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் தெரிவித்துள்ளார். தென்ஆப்ரிக்காவில் தான் கடந்த மாதம் 24ம் தேதி முதல் முறையாக ஒமிக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போச்வானா,  இஸ்ரேல், பிரிட்டன், நெதர்லாந்து, செக் குடியரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும், அறிகுறிகளும் தீவிர தன்மை கொண்டதாகவும் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் ஜெனிவாவில் பேட்டியளித்தார். அப்போது கொரோனா வைரஸின் உருமாற்ற பிரிவான ஒமிக்ரான் வைரஸ் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் ஒமிக்ரானின் இந்த வளர்ச்சியை உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து மிக தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

Related Stories: