சித்திரை மாதத்தையே தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும்; ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கை:  தமிழ்நாட்டில் பல நூற்றாண்டு காலமாக சித்திரை மாதப் பிறப்பு தான் தமிழ்ப் புத்தாண்டு தினமாக தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்ற மரபு. இந்தநிலையில், 2022ம் ஆண்டு பொங்கல் பரிசுப் பையின் முகப்பில் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

எனவே, சித்தரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற நடைமுறை, மரபு, கலாசாரம் தொடர்ந்திடவும், பொங்கல் பரிசுப் பையின் முகப்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் என்ற வாசகங்களை குறிப்பிட்டுள்ளதை நிறுத்திட தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென  முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More