ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடும் சமந்தா

சென்னை: நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுகிறார். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து வரும் படம் புஷ்பா. இதில் ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் உள்பட பலர் நடிக்கிறார்கள். சுகுமார் இயக்குகிறார். ஆந்திர காடுகளில் நடக்கும் செம்மரக்கட்டை கடத்தலை பின்னணியாக கொண்டு தயாராகும் இந்த படம் இரண்டு பாகங்களாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளிவருகிறது. முதல் பாகம் வருகிற 17ம் தேதி வெளிவருகிறது.

இந்த படத்தில் நடிகை சமந்தா முதன்முறையாக ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுகிறார். இந்த நடனத்துக்கு சமந்தாவுக்கு ஒரு கோடி சம்பளம் கொடுக்கப்படுவதாகவும், பாடல் காட்சி 3 கோடி ரூபாய் செலவில் படமாக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நடிகை சமந்தா தனது காதல் கணவர் நாக சைதன்யாவை பிரிந்த பிறகு நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தி பேமிலி மேன் வெப் தொடரில் படுக்கை அறை காட்சியில் நடித்ததுதான் சமந்தா, நாக சைதன்யா பிரிவுக்கு காரணம் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், தி பேமிலி மேன் குழு தயாரிக்கும் அடுத்த தொடரிலும் சமந்தா நடிக்கிறார். இதுதவிர சாகுந்தலம் என்கிற தெலுங்கு படத்திலும், காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.

Related Stories: