மதுராந்தகம் நகராட்சியில் புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சி புதிய ஆணையாளராக என்.அருள் நேற்று பொறுப்பேற்று கொண்டார். மதுராந்தகம் நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய நாராயணன், பூந்தமல்லி நகராட்சி ஆணையாளராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, மதுராந்தகம் நகராட்சிக்கு சென்னை தலைமை செயலகத்தில் உதவி பிரிவு அலுவலராக பணியாற்றிய என்.அருள், ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.

இதைதொடர்ந்து, நேற்று புதிய ஆணையாளராக அருள் பொறுப்பேற்றுகொண்டார். அவருக்கு, இப்பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories:

More