தமிழகத்தில் புதிதாக 720 பேருக்கு கொரோனா

சென்னை:  மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1 லட்சத்து 48 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 720 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அந்தவகையில், கொரோனாவிற்கு 8,244 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 758 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,82,192 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 5 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் நேற்று உயிரிழந்தனர். அதிகபட்சமாக நேற்று சென்னையில் 115, கோவையில் 109 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More