2000 அம்மா மினி கிளினிக்கை மூடுவதை கைவிட வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: அம்மா மினி கிளினிக்கில் பணிபுரியும் சுமார் 1820 மருத்துவர்களையும், மற்றும் 1420 மருத்துவப் பணியாளர்களையும் எதிர்வரும் வரும் டிச.4ம் தேதி முதல் பணி நீக்கம் செய்ய உள்ளதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வந்துள்ளது.அம்மா மினி கிளினிக் திட்டம் என்பது நகரம் மற்றும் கிராமப் புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே சிகிச்சை அளிக்கப்படும் ஒரு அற்புதமான திட்டம்.

கொரோனா நோய்த்தொற்றை இன்று, மூன்று இலக்க எண்ணிக்கையில்கட்டுக்குள் கொண்டு வந்த அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை டிசம்பர் 4ம் தேதி முதல் பணி நீக்கம் செய்ய உள்ளது என்ற சமூக வலைதளச் செய்தி என்னை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. எனவே அம்மா மினி கிளினிக்குகளில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: