விராலிமலை அருகே தொடர் மழைக்கு 10 ஆடுகள் பலி

விராலிமலை: விராலிமலை தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கால்நடைகள் தொடர்ந்து இறந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த தொடர்மழைக்கு கல்குடி ஊராட்சி தாளப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சின்னக்கண்ணுக்கு சொந்தமான 9 செம்மறி ஆடுகள் அதிகாலை இறந்தது.

இதேபோல் பேராம்பூர் ஆறுமுகம் என்பவரின் ஒரு செம்மறி ஆடும் தொடர்மழைக்கு குளிர் தாங்காமல் இறந்தது. விராலிமலை வட்டார பகுதிகளில் தொடர்ந்து கால்நடைகள் இறந்து வருவது கால்நடைகள் வளர்ப்பவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More