தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கும் நிலையில் 7485 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், நீர்வளத்துறை கட்டுபாட்டில் உள்ள 14,138 ஏரிகளில் 7485 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதில், 95 ஏரிகளை கொண்ட அரியலூர் மாவட்டத்தில் 61 ஏரிகளும், 28 ஏரிகளை கொண்ட சென்னையில் 26 ஏரிகளும், 564 ஏரிகளை கொண்ட செங்கல்பட்டில் 542 ஏரிகளும், 27 ஏரிகளை கொண்ட கோவையில் 17 ஏரிகளும், 228 ஏரிகளை கொண்ட கடலூரில் 194ம், 74 ஏரிகளை கொண்ட தர்மபுரியில் 8, 190 ஏரிகளை கொண்ட திண்டுக்கல்லில் 79ம், 22 ஏரிகளை கொண்ட ஈரோட்டில் 9ம், 281 ஏரிகளை கொண்ட காஞ்சிபுரத்தில் 355ம், 335 ஏரிகளை கொண்ட கள்ளக்குறிச்சியில் 299ம், 2040 ஏரிகளை கொண்ட கன்னியாகுமரியில் 634ம், 18 ஏரிகளை கொண்ட கரூரில் 3ம், 67 ஏரிகளை கொண்ட கிருஷ்ணகிரி 57ம், 1340 ஏரிகளை கொண்ட மதுரையில் 592ம், 79 ஏரிகளை கொண்ட நாமக்கல் 28ம், 73 ஏரிகளை கொண்ட பெரம்பலூரில் 59ம், 1131 ஏரிகளை கொண்ட புதுக்கோட்டையில் 451ம், 641 ஏரிகளை கொண்ட ராமநாதபுரத்தில் 51ம், 369 ஏரிகளை கொண்ட ராணிப்ேபட்டையில் 296ம், 107 ஏரிகளை கொண்ட சேலத்தில் 65ம், 1460 ஏரிகளை கொண்ட சிவகங்கையில் 276ம், 543 ஏரிகளை கொண்ட தென்காசியில் 451ம், 640 ஏரிகளை கொண்ட தஞ்சையில் 482ம், 135 ஏரிகளை கொண்ட தேனியில் 35ம், 228 ஏரிகளை கொண்ட தூத்துக்குடியில் 185ம், 781 ஏரிகளை கொண்ட திருநெல்வேலியில் 411ம், 49 ஏரிகளை கொண்ட திருப்பத்தூரில் 33ம், 578 ஏரிகளை கொண்ட திருவள்ளூரில் 438ம், 697 ஏரிகளை கொண்ட திருவண்ணாமலையில் 669 ஏரிகளும், 30 ஏரிகளை கொண்ட திருவாரூரில் 15ம், 39 ஏரிகளை கொண்ட திருப்பூர் 7ம், 507 ஏரிகளை கொண்ட விழுப்புரத்தில் 472ம், 101 ஏரிகளை கொண்ட வேலூரில் 82, 342 ஏரிகளை கொண்ட விருதுநகரில் 47 ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை 3186 ஏரிகளும், 51 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை 1497 ஏரிகளும், 26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை 1357 ஏரிகளும், 1 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை 455 ஏரிகளும் நிரம்பியுள்ளது. அதே நேரத்தில் மாநிலம் முழுவதும் 158 ஏரிகளில் தண்ணீர் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும், தொடர்ந்து மழை வெளுத்து வாங்கி வருவதால், மேலும், பல ஏரிகள் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

* சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அனைத்து ஏரிகளிலும் நீர் இருப்பு

வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் சென்னை மாவட்டத்தில் 26 ஏரிகளும், திருவள்ளூரில் 53, செங்கல்பட்டில் 547, காஞ்சிபுரத்தில் 355 ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 76 % முதல் 99% வரை 95 ஏரிகளும், 51% முதல் 75 % வரை 34 ஏரிகளும், 26 % முதல் 50 % வரை 44 ஏரிகளும், 1 %முதல் 25 % வரை 12 ஏரிகளும் நீர் இருப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More