வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கும் நிலையில் தமிழகத்தின் 35 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு உயர்வு: நீர்வளத்துறை ஆய்வில் தகவல்

சென்னை: வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கிய நிலையில் தமிழகத்தில் 35 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு உயர்ந்து இருப்பது நீர்வளத்துறை நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 26ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், மாநிலம் முழவதும் பரலாவக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள 7 ஆயிரம் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 90 அணைகளில் 206 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. தற்போது வரை 20 அணைகள் நிரம்பியுள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேலும், பல அணைகள், ஏரிகள் நிரம்ப வாய்ப்புள்ளது.

இந்நிலையில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் மாநிலம் முழுவதும் 35 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளது. இது தொடர்பாக, மாநில நீர் வள ஆதார விவர குறிப்பு மையம் ஆய்வு மேற்கொண்டது. 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் ஆய்வு செய்யப்ட்டது. தமிழகத்தில் அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்பட்ட நீர் அளவு, நீர்வள ஆதாரத்துறை மூலம் கணக்கிடப்பட்டது.

இவ்வாறு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்தாண்டு நவம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

குறிப்பாக, திருவள்ளூரில் 1.73மீ, காஞ்சிபுரம் 2.75மீ, திருவண்ணாமலை 4.81மீ, வேலூர் 3.03மீ, திருப்பத்தூர் 3.82மீ, திருநெல்வேலி 2.74மீ, தூத்துக்குடி 1.84மீ, சிவகங்கை 2.48மீ, தர்மபுரி 0.19மீ, திண்டுக்கல் 2.02மீ, மதுரை 2.39மீ, திருநெல்வேலி 2.74மீ, கள்ளக்குறிச்சி 3.50மீ, விருதுநகர் 3.02மீ, செங்கல்பட்டு 2.13மீ, திருப்பூர் 1.74மீ, தர்மபுரி 0.19மீ, கிருஷ்ணகிரி 1.57 கடலூர் 1.41 மீ, விழுப்புரம் 3.66மீ, தஞ்சை 0.41மீ, திருவாரூர் 0.72மீ, திருச்சி 2.25மீ, கரூர் 0.32மீ, பெரம்பலூர் 3.64மீ, புதுக்கோட்டை 2.17மீ, அரியலூர் 1.61மீ, சேலம் 0.95மீ, நாமக்கல் 0.80மீ, ஈரோடு 1.62மீ, கோவை 0.20மீ, நீலகிரி 0.37மீ, மதுரை 2.39மீ, ராமநாதபுரம் 0.44மீ, கன்னியாகுமரி 1.09மீ, தென்காசி 2.40மீ, ராணிப்பேட்டை 2.55மீ உட்பட 35 மாவட்டங்களில் கடந்தாண்டு நவம்பரை காட்டிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தேனி மாவட்டத்தில் 1.77மீ நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் தேனி மாவட்டத்தில் குறைந்து இருப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: