வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி; எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் மணி கைது.!

சேலம்: வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் மணி கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம்,ஓமலூர் தின்னப்பட்டி அடுத்த பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி.இவர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் 10 ஆண்டுகால தனி உதவியாளராக இருந்து வருகிறார். இவர் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நெய்வேலியினைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருந்தார்.

அதில்,மணிக்கு தான் 17 லட்சம் ரூபாய் கொடுத்திருந்ததாக தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து,தலைமறைவான மணியின் முன் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில்,அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.37 கோடி மோசடி செய்த புகாரில் எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் மணியை, அவரது வீட்டில் வைத்து சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories:

More