சார்பதிவாளர் அலுவலகங்களில் தலா 3 ஐபி கேமராக்கள் பொருத்த அரசு உத்தரவு: போலி ஆவண பதிவு, இடைத்தரகர்களை கண்காணிக்க அதிரடி நடவடிக்கை

சென்னை: பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் தலா 3 இணையவழி புகைப்பட கருவிகள் நிறுவப்பட்டு அலுவலக செயல்பாடுகள் நேரடியாக தொலை காண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவ்வசதிக்காக ரூ.5.98 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பேரவையில் அமைச்சர் மூர்த்தி அறிவித்தார். இந்த அறிவிப்பை ெசயல்படுத்தும் விதமாக ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகங்களிலும் ஏற்கனவே பொருத்தப்பட்ட ஐபி கேமராவுடன் கூடுதலாக 2 கேமரா வைக்கப்படுகிறது.

ஒன்று சார்பதிவாளர் நுழைவாயில், பதிவுப்பணி நடைபெறும் பகுதி, நுழைவாயிலில் ரெக்கார்டு அறை அமைக்கப்படுகிறது. இந்த காட்சிகள் 8 மாதங்களுக்கு சேமித்து வைக்கப்படுகிறது. 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் 9 டிஐஜி மற்றும் ஐஜி பார்க்கும் வகையில் இணைக்கப்படுகிறது. இந்த ஐபி கேமரா வைப்பதன் மூலம் வெளிப்படையான உடனடி சேவை வழங்க முடியும். ஆவணதாரர்களுக்கு சாட்சியமாக இருக்கும். இடைத்தரகர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும்.

தலைமையிடம், மண்டல அலுவலகங்கள் மூலம் சார்பதிவாளர் அலுவலகங்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாக கவனிக்க முடியும். சட்ட விரோத நடவடிக்கைகளில் பதிவுப்பணி நடைமுறையில் பாதுகாக்கிறது. தேவையற்ற நபர்கள் வரும் பட்சத்தில் அவர்களை கைது செய்யும் வகையில் இந்த ஐபி கேமரா பயன்படுகிறது. ஆவணங்கள் மற்றும் திருமண பதிவின் போது, மட்டுமல்ல, போலியான ஆவண பதிவை கண்டறியும், எந்தவொரு விசாரணையும் நடத்தி சிறை தண்டனைக்கு அனுப்பவும் பயனுள்ளாக இருக்கும். தமிழகத்தில் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இந்த கேமரா பொருத்த ரூ.5.97 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: