இளம்பெண் வீட்டில் 20 சவரன் திருட்டு: ஆண் நண்பர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே போளிவாக்கம் கோமதி நகரை சேர்ந்தவர் மணிமேகலை(46). இவரது கணவன் வெங்கடேசன், சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களின் மகள் இஷாகோபிகா(25). இவரும் கீழ்நல்லாத்தூர் பகுதியை சேர்ந்த கேசவகுமார்(26) என்பவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இதன் காரணமாக அவரது வீட்டுக்கு கேசவகுமார் அடிக்க சென்றுவந்துள்ளார். மேலும், அவர்களது குடும்பத்துக்கு தேவையான உதவிகளையும் செய்துள்ளார்.

இந்நிலையில், மணிமேகலை வீட்டில் உள்ள பீரோவில் இருந்து 20 சவரன் நகைகள் மற்றும் 250 கிராம் வெள்ளி பொருட்கள் மாயமானது. தனது மகளின் நண்பர் கேசவகுமார்தான் நகை திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என மணிமேகலைக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் மணவாளநகர் போலீசில் மணிமேகலை புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கேசவகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

More